செய்திகள்

அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகை பதிவேடு குறித்து விளக்க கூட்டம்

Published On 2019-05-16 18:24 GMT   |   Update On 2019-05-16 18:24 GMT
பயோ மெட்ரிக் திட்டம் குறித்த விளக்க கூட்டமும், கல்வி மேலாண்மை தகவல் மையம் குறித்த விளக்க கூட்டமும் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
பெரம்பலூர்:

அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர்கள் வருகை பதிவேடுக்கான பயோ மெட்ரிக் திட்டம் நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. பயோ மெட்ரிக் திட்டம் குறித்த விளக்க கூட்டமும், கல்வி மேலாண்மை தகவல் மையம் குறித்த விளக்க கூட்டமும் பெரம்பலூர் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதனை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் தொடங்கி வைத்து, பயோ மெட்ரிக் கருவிகள் குறித்தும், பயோ மெட்ரிக் திட்டத்தை பள்ளிகளில் செயல்படுத்துவதற்காக ஆசிரியர்கள், மாணவ-மாணவிகளுக்கான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கி பேசினார்.

மேலும் கல்வி மேலாண்மை தகவல் மையத்தில் பள்ளியின் அனைத்து விவரங்களை தலைமை ஆசிரியர் பதிவு செய்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் 98 தலைமை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News