ஆன்மிகம்
கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

Published On 2020-11-21 05:46 GMT   |   Update On 2020-11-21 05:46 GMT
கந்தசஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் முகக்கவசங்கள் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதித்தனர்.
ஆரணி நகரில் கொசப்பாளையம் பகுதியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி கடந்த 5 நாட்களாக லட்சார்ச்சனை விழா நடைபெற்று வந்தது. இதில் பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை. நேற்று 6-வது நாளாக ஏகதின லட்சார்ச்சனை முடிந்ததும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, மாலையில் கோவில் உள் வளாகத்திலேயே சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதில் முகக்கவசங்கள் அணிந்த பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதித்தனர்.

இதேபோல ஆரணி-ஆரணிபாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் முகக்கவசங்கள் அணிந்து சாமியை தரிசனம் செய்தனர்.

ஆரணியை அடுத்த முள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், சேவூர் ஊராட்சியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத் தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) முருகர் கோவில்களில் சாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News