செய்திகள்
1,283 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

தொடர் மழை: காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் 1,283 ஏரிகள் முழுவதும் நிரம்பியது

Published On 2021-11-26 06:18 GMT   |   Update On 2021-11-26 06:18 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 564 ஏரிகள் உள்ளன. இதில் 517 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 45 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பி உள்ளது.
காஞ்சீபுரம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஏரி-குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் மொத்தம் 1,523 பாசன ஏரிகள் உள்ளன. இதில் 1,283 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளில் 341 ஏரிகள் நிரம்பி உள்ளது. இதில் 38 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் வரையும் நிரம்பி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 564 ஏரிகள் உள்ளன. இதில் 517 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி இருக்கிறது. 45 ஏரிகள் 76 முதல் 99 சதவீதம் நிரம்பி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் 578 ஏரிகளில் 425 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 60 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 36 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 46 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும் நிரம்பி காணப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 14 ஆயிரத்து 138 ஏரிகள் உள்ளன. இதில் 7,123 ஏரிகள் நிரம்பி இருக்கிறது. 3,185 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 1,578 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 1,538 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 549 ஏரிகள் 25 சதவீதம் வரையும் நிரம்பி உள்ளது.

இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News