செய்திகள்
கோழி கூண்டின் அருகே கோழிகள் இறந்து கிடந்ததை காணலாம்.

சாமிதோப்பில் 60 கோழிகளை கடித்துக்கொன்ற மர்ம விலங்கு

Published On 2021-05-01 03:54 GMT   |   Update On 2021-05-01 03:54 GMT
கோழிக்கூண்டுக்குள் மர்ம விலங்கு புகுந்து கோழிகளை கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்தாமரைகுளம்:

கோழிக்கூண்டுக்குள் மர்ம விலங்கு புகுந்து கோழிகளை கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டம் சாமிதோப்பை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 72). இவர் தன்னுடைய வீட்டு வளாகத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்து வருகிறார். தினசரி மாலையில் கோழிகளை கூண்டுகளில் அடைத்து வைப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை உணவு கொடுத்துவிட்டு கோழிகளை கூண்டுகளில் வைத்து அடைத்தனர். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது ஒரு கூண்டில் வலைக்கம்பி பிரிக்கப்பட்டிருந்தது. சில கூண்டின் கதவுகள் உடைக்கப்பட்டு, கோழிகள் அனைத்தும் இறந்த நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியன் கோழிகளை எடுத்துப் பார்த்தபோது அவற்றின் தலை, கால் போன்ற பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்தன. ஏதோ மர்ம விலங்கு கூண்டிற்குள் புகுந்து கோழிகளை கடித்து குதறி கொன்றிருப்பது தெரியவந்தது.

இதில் 60 கோழிகள் கொல்லப்பட்டு கிடந்தன. இந்த சம்பவம் குறித்து பாண்டியன் சாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதிவாணனிடம் தகவல் தெரிவித்தார். இதுசம்பந்தமாக மதிவாணன் போலீசுக்கும், வனத்துறைக்கும் புகார் மனு அனுப்பினார்.

கோழிக்கூண்டுக்குள் மர்ம விலங்கு புகுந்து கோழிகளை கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News