செய்திகள்
மோசடி

சிங்காநல்லூரில் உதவி செய்வது போல நடித்து பெண்ணிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த வாலிபர்

Published On 2021-11-13 11:45 GMT   |   Update On 2021-11-13 11:45 GMT
கோவை சிங்காநல்லூரில் உதவி செய்வது போல நடித்து பெண்ணின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிங்காநல்லூர்:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள பார்க் வீதியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவரது மனைவி அமிர்தவள்ளி (வயது 56).

சம்பவத்தன்று இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அமிர்தவள்ளிக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியாததால் அங்கு வந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுத்து தரும்படி கூறினார். அந்த வாலிபர் உதவி செய்வது போல நடித்து அவரது கையில் இருந்த மற்றொரு ஏ.டி.எம். கார்டை அமிர்தவள்ளியின் கையில் கொடுத்து பணம் வரவில்லை என கூறினார். இதனையடுத்து அவர் அங்கு இருந்து சென்றார்.

பின்னர் அந்த வாலிபர் அமிர்தவள்ளியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியதில் வங்கி கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றார். பணம் வராததால் அமிர்தவள்ளி வங்கிக்கு சென்று பணம் வரவில்லை என கூறினார். வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த போது கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. 

இது குறித்து அமிர்தவள்ளி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி செய்வது போல நடித்து பெண்ணின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News