செய்திகள்
உத்தப்பா

இந்த நாளை ஒருபோதும் நான் மறக்கமாட்டேன்: ராபின் உத்தப்பா

Published On 2021-09-15 10:18 GMT   |   Update On 2021-09-15 10:18 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ‘பவுல்-அவுட்’ வெற்றியின் நீங்கா நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் முதன்முதலாக கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. குரூப் சுற்றில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை பவுல்-அவுட் முறையில் வீழ்த்தியது.

டர்பனில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் 20 ஓவர்கள் முடிவில் 141 ரன்களை எடுத்ததால் போட்டி டை-யில் முடிந்தது. அதனால் ‘பவுல்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.

அந்த போட்டியின் பவுல்-அவுட்டில் இந்தியாவின் சேவாக், ஹர்பஜன் பந்தை வீசி ஸ்டம்புகளை தகர்த்தனர். பின்னர், மூன்றாவதாக இந்தியா சார்பில் பந்து வீசியவர் உத்தப்பா.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கூறுகையில், ‘‘ஆட்டம் சமனில் முடிந்ததும் சக வீரர்களுடன் பவுல்-அவுட்டில் யாரெல்லாமல் பந்து வீசுவது என்பது குறித்து விவாதித்தோம். அப்போது, நான் டோனியிடம் நேராக சென்று நான் பந்து வீசுகிறேன் என்று சொன்னதும் டோனி பதில் ஏதும் கூறாமல், நிச்சயமாக என்று கூறினார்.

இதை நான் ஒருபோதும்  மறக்கவே மாட்டேன். டோனியின் சிறப்பான தலைமை பண்பை நான் பெருமிதம் கொள்கிறேன்.  அதுதான் கேப்டனாக டோனி விளையாடிய முதல் போட்டி. அதுமட்டுமல்லாமல், இந்த தருணத்தை ஒருபோதும் மறக்கமாட்டேன்” எனக் கூறினார்.
Tags:    

Similar News