ஆட்டோமொபைல்
கே.டி.எம். டியூக் 125

இந்தியாவில் கே.டி.எம். மோட்டார்சைக்கிள்களின் விலை மாற்றம்

Published On 2019-09-16 07:57 GMT   |   Update On 2019-09-16 07:57 GMT
கே.டி.எம். இந்தியா நிறுவனம் தனது டியூக் மாடல் மோட்டார்சைக்கிள்களின் விலையை மாற்றியுள்ளது. புதிய விலை விவரங்களை பார்ப்போம்.



கே.டி.எம். இந்தியா நிறுவனம் டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களின் விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் கே.டி.எம். டியூக் 125 மாடலின் விலை ரூ. 2,248 கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1,537 உயர்த்தப்பட்டுள்ளது.

விலை மாற்றத்தின் பின் கே.டி.எம். டியூக் 125 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல்கள் முறையே ரூ. 1.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 1.48 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.



இரு மோட்டார்சைக்கிள்களிலும் 124சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 14.5 பி.ஹெச்.பி. @9250 ஆர்.பி.எம். மற்றும் 12 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

கே.டி.எம். டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களில் பல்வேறு அம்சங்கள், உபகரணங்கள் மற்றும் ஸ்டைலிங் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு மாடல்களிலும் மேம்பட்ட கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. அம்சங்களை பொருத்தவரை இரு மாடல்களிலும் முன்புறம் 43 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோ-ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டிருக்கிறது.

பிரேக்கிங்கிற்கு முன்புறம், பின்புறங்களில் 300 எம்.எம். மற்றும் 230 எம்.எம். டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News