உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் டி.எஸ்.பி. பேசிய காட்சி

பொங்கல் விளையாட்டு போட்டிகளுக்கு தடை

Published On 2022-01-12 08:47 GMT   |   Update On 2022-01-12 08:47 GMT
பெரியகுளத்தில் பொங்கல் பண்டிகை நாளில் சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த போலீசார் தடை விதித்துள்ளனர்
பெரியகுளம்:

தேனிமாவட்டம் பெரியகுளத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவின் உமேஷ் டோங்கரே வழிகாட்டுதலின்படி பெரியகுளம் டி.எஸ்.பி. முத்துக்குமார் தலைமையில் பொதுமக்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் காரணமாகவும், அவற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பெருகி வரும் குற்றச் சம்பவங்களை தடுத்திடும் வகையிலும், இளைஞர்களை நல்வழிப்படுத்திடும் நோக்கோடும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களை தடுத்திடும் வகையிலும், பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும், பாதுகாப்பு அளித்திடும் வகையிலும் அரசு செயல்படுத்தி வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு இளைஞர்கள் கூட்டம் கூட்டவோ, ஒலிபெருக்கிகள் அமைத்து விளையாட்டு போட்டிகள் நடத்திடவோ கூடாது என்றும், வீட்டில் இருந்தவாறே அமைதியான முறையில் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு காட்டும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்திட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் மீனாட்சி, சுகுமாறன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வைரமணி, சப்&இன்ஸ்பெக்டர்கள், போலீசார்கள், அனைத்து சமுதாய பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News