செய்திகள்
தடுப்புச்சுவர் இல்லாத பாலம்.

நத்தக்காடையூர் அருகே பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Published On 2021-10-10 09:02 GMT   |   Update On 2021-10-10 09:02 GMT
மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பாய்ந்து வரும் மழைநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும்.
காங்கேயம்:

திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சியில் புதுவெங்கரையாம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையை இணைக்கும் இந்த கிராமத்தின் அருகே நொய்யல் ஆறு செல்கிறது. 

இந்த நொய்யல் ஆற்றின் குறுக்கே ஒரு தாழ்வான தரைப்பாலம் கட்டப்பட்டு மேலே கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் தரைப்பாலத்தின் இருபுறமும் பாதுகாப்புக்கு தடுப்புச்சுவர்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.

மழைக்காலங்கள் மற்றும் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் பாய்ந்து வரும் மழைநீர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மேலே சுமார் 20 அடி வரை உயர்ந்து சீறிப்பாய்ந்து செல்லும். அப்போது இந்த நொய்யல் ஆற்றில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். 

தற்போது கனரக வாகனங்கள் எதிர் எதிரே வரும்போது ஒதுங்க வழியின்றி  நொய்யல் ஆற்றின் உள்ளே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு விடும் அபாயத்துடனும், அச்ச உணர்வுடனும் சென்று வருகின்றன. 

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு நொய்யல் ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பு சுவருடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் கட்டி சீரான வாகன போக்குவரத்து நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News