செய்திகள்
கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசிய காட்சி. அருகில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் பலர் உள்ளனர்.

பெட்ரோல், கியாஸ் விலையை குறைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் - தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

Published On 2021-09-13 09:25 GMT   |   Update On 2021-09-13 11:07 GMT
மத்திய அரசை கண்டித்து அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு வீடுகள் முன்பு கருப்பு கொடி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருப்பூர்;

திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கூட்டம் திருப்பூர் மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் தளபதி அரங்கில் நடந்தது. 

இதற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். 

இதில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டார். இதில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வக்கீல் குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

கூட்டத்தில் தந்தை பெரியார்  பிறந்தநாள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாள், தி.மு.க. தொடங்கப்பட்ட நாள் ஆகிய 3 நிகழ்ச்சிகளையும் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக சென்னை கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை சீர்மிகு நிகழ்ச்சியாக நடத்துவது, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மறுப்பது, பெட்ரோல், டீசல் விலை, சமையல் கியாஸ் விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை விற்க முற்படும் மத்திய அரசை கண்டித்து அனைத்து கூட்டணி கட்சிகளின் சார்பில் வருகிற 20-ந் தேதி காலை 10 மணிக்கு வீடுகள் முன்பு கருப்பு கொடி போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

இதனை திருப்பூர் கிழக்கு மற்றும் வடக்கு மாவட்ட பகுதிகளில் வெற்றியடைய செய்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
Tags:    

Similar News