லைஃப்ஸ்டைல்
அரிசி பொரி உப்புமா

10 நிமிடத்தில் செய்யலாம் சத்தான ஸ்நாக்ஸ்

Published On 2021-11-05 05:17 GMT   |   Update On 2021-11-05 05:17 GMT
பொரியை வைத்து அருமையான ரெசிபிகளை செய்யலாம். இன்று பொரி, காய்கறிகளை சேர்த்து சுவையான சத்தான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
 
அரிசி பொரி - 2 பெரிய கப்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
எலுமிச்சம் பழம் - 1
 
தாளிக்க:
 
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
காய்ந்த மிளகாய் - 4
கறிவேப்பிலை - தேவைக்கு
கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
பட்டாணி - சிறிதளவு
கொத்துமல்லித் தழை - சிறிது

செய்முறை :

 
தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
 
ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரை விட்டு அதில் பொரியைக் கொட்டவும். பொரி தண்ணீரில் போட்டவுடன் மிதக்கும். கைகளால் லேசாக அழுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். பின்னர், இரண்டு கைகளாலும் பொரியை அள்ளி, நன்றாகப் பிழிந்து எடுத்து வேறொருப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலைத் போட்டு தாளித்த பின் வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும்.
 
வெங்காயம், தக்காளி சற்று வதங்கியவுடன், அதில் உப்பு, மஞ்சள்தூள், வேக வைத்த பட்டாணியை சேர்த்து வதக்கி, உடனே அடுப்பை அணைத்து விடவும்.
 
பின் அதில் ஊறவைத்தப் பொரி, வேர்க்கடலை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
 
அடுத்து அதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட்டு ஒரு கிளறுக் கிளறி அதன் மேல் கேரட் துருவல், கொத்துமல்லித்தழைத் தூவி பரிமாறவும்.
 
சுவையான அரிசி பொரி உப்புமா ரெடி.

Tags:    

Similar News