செய்திகள்
விராட் கோலி

20 ஓவர் போட்டியில் விராட் கோலி புதிய சாதனை

Published On 2020-10-06 07:16 GMT   |   Update On 2020-10-06 07:16 GMT
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைத்துள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி 43 ரன்கள் எடுத்தார்.

10 ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் போட்டியில் 9 ஆயிரம் ரன்னை தொட்டு புதிய சாதனை படைத்தார். 286 போட்டியில் விளையாடி அவர் இந்த ரன்னை எடுத்துள்ளார்.

20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை விராட்கோலி படைத்தார். சர்வதேச அளவில் 7-வது வீரர் ஆவார். வி1ராட்கோலி 286 ஆட்டத்தில் 9 ஆயிரத்து 33 ரன் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் அவர் 5,524 ரன் எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். சமீபத்தில் ரோகித்சர்மா 5 ஆயிரம் ரன்னை எடுத்து ஐ.பி.எல்.லில் 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் 9 ஆயிரம் எடுத்த வீரர்கள் வருமாறு:-

1. கிறிஸ்கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)-13,296 ரன்

2. போல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்)- 10,370 ரன்

3. சோயிப் மாலிக் (பாகிஸ்தான்)- 9926 ரன்

4. மெக்குல்லம் (நியூசி லாந்து)- 9922 ரன்

5. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)- 9451 ரன்

6. ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா)- 9646 ரன்

7. வீராட்கோலி (இந்தியா) - 9033 ரன்

Tags:    

Similar News