உள்ளூர் செய்திகள்
தேர்வான மாணவிகளை படத்தில் காணலாம்.

நெல்லையில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேர்வாகி சாதித்த கூலி தொழிலாளிகளின் மகள்கள்

Published On 2022-01-29 09:33 GMT   |   Update On 2022-01-29 09:33 GMT
நெல்லை மாவட்டத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கவுன்சிலிங்கிற்கு அரசு பள்ளிகளை சேர்ந்த 15 மாணவ-மாணவிகள் சென்றனர். இதில் 11 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
நெல்லை:

தமிழகம் முழுவதும்‘நீட்தேர்வில் பெற்ற மதிப் பெண்கள் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏழை மாணவ - மாணவிகள் பலருக்கு எம்.பி.பி.எஸ். படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கவுன்சிலிங்கிற்கு மொத்தம் 15 மாணவ-மாணவிகள் சென்றனர். இதில் 11 பேருக்கு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

 இதில் கல்லணை மேல்நிலைப் பள்ளியில் படித்த ஞாழினி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகிய 3 மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக் கல்லூரியிலும்,  காயத்ரி என்ற மாணவிக்கு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியிலும் , சவுந்தர்யா என்பவருக்கு குமரி மருத்துவக் கல்லூரியிலும், கிருத்திகா என்பவருக்கு கோவை தனியார் மருத்துவக் கல்லூரியிலும், ஆப்ரீன் பாத்திமா என்பவருக்கு கோவை பல் மருத்துவக் கல்லூரியிலும் என ஒரே பள்ளியில் படித்த 7 மாணவிகளுக்கு அரசு ஒதுக்கீட்டில்  இடம் கிடைத்துள்ளது.

மேலும் நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி திவ்யா விருதுநகர் மருத்துவக் கல்லூரியிலும், விஷ்ணு பிரியா என்ற மாணவி நீலகிரி மருத்துவக் கல்லூரி யிலும், உதய செல்வம் என்ற மாணவர் குமரி மருத்துவக் கல்லூரியிலும் இடம் பிடித்துள்ளனர்.

இதுபோல மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி பானுபிரியா விற்கு நெல்லை மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்டத் தை சேர்ந்த 11 மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு மருத்துவ கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத் துள்ளது.

இதில் மாணவிகள் 10 பேரும், மாணவர்கள் ஒரு வரும் அடங்குவர்.  தொடர்ந்து நடைபெற உள்ள அடுத்த கட்ட கலந்தாய்வில் மேலும் சிலருக்கும் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இருந்து மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகி உள்ள 11 மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோர் கூலித் தொழி லாளர்களின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பீடித் தொழிலாளர்களின் குழந்தைகளும் சிலர் உள்ளனர். இவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான ஆணை இன்று அல்லது வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

அதன்பிறகே மாணவ- மாணவிகள் நெல்லை திரும்புகிறார்கள்.
Tags:    

Similar News