தொழில்நுட்பச் செய்திகள்
எலான் மஸ்க்

ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா? - எலான் மஸ்க் கருத்துகணிப்பு

Published On 2022-04-05 07:00 GMT   |   Update On 2022-04-05 07:00 GMT
ட்விட்டரில் அதிக பங்குகளை வைத்திருக்கும் நபரும் எலான் மஸ்க்தான் என்பதால், கருத்துகணிப்பு மூலம் அவர் வைக்கும் கோரிக்கைக்கு ட்விட்டர் நிறுவனம் செவிசாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களை நிறுவியருமான எலான் மஸ்க் ட்விட்டரில் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தினார்.

அதில் ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என கேள்வி எழுப்பினார்.  அந்த கேள்விக்கு 74.4 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்றும், 25.6 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் வாக்களித்திருந்தனர்.

இந்த கருத்துக்கணிப்பை பகிர்ந்த ட்விட்டர் சி.இ.ஓ பராக் அகர்வால் இந்த கருத்துகணிப்புக்கு கவனமாக வாக்களியுங்கள். இந்தன் விலைவு மிக முக்கியம் என கூறியுள்ளார்.

எலான் மஸ்க் இந்த கருத்துகணிப்புக்கு முன்பு தான் ட்விட்டரில் தனக்கு 9.2 சதவீத பங்கு இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,700 கோடி ஆகும்.  ட்விட்டரில் அதிக பங்குகளை வைத்திருக்கும் நபரும் எலான் மஸ்க்தான் என்பதால், கருத்துகணிப்பு மூலம் அவர் வைக்கும் கோரிக்கைக்கு ட்விட்டர் நிறுவனம் செவிசாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம், ட்விட்டரில் எடிட் பட்டன் வந்தால், சிலர் தனது சொந்த விளம்பரத்திற்காக ஒரு ட்வீட்டை பதிவிட்டு அது அதிக கவனத்தை பெற்றவுடன் வேண்டுமென்றே கருத்தை மாற்றி எடிட் செய்துகொள்ளும் அபாயமும் இருப்பதால பலர் தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News