இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்- அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி

Published On 2022-01-12 08:43 GMT   |   Update On 2022-01-12 10:26 GMT
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
மொகாலி:

பஞ்சாப்பில் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு அதன் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்கு சேகரித்து வருகிறார். 

பஞ்சாப் மொகாலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:-

பஞ்சாப் மாநிலத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை ஆம் ஆத்மி கட்சி அடுத்த வாரம் அறிவிக்கும். பஞ்சாப் மாநிலத்தை வளர்ச்சி அடைய செய்வதற்கும், வளம் செழிக்க செய்வதற்கும் 10 புள்ளிகளை கொண்ட ‘பஞ்சாப் மாதிரியை’ உருவாக்கியுள்ளோம். 

ஆம் ஆத்மி கட்சி அதிகாரத்தில் இருந்தால் தற்போது பஞ்சாப்பில் இருந்து கனடா சென்றுள்ள இளைஞர்கள் 5 வருடங்கள் கழித்து திரும்பி வரும்போது செழிப்பான பஞ்சாப்பை பார்ப்பார்கள்.

ஆம் ஆத்மிக்கு ஓட்டளித்தால் பஞ்சாப்பிலிருந்து போதைப்பொருள் கும்பலைத் சுத்தமாக துடைத்து எடுத்துவிடுவோம். புனித தளம் தொடர்பான வழக்கில் நீதியை நிலை நாட்டுவோம், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வரும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவோம். 

மாநிலம் முழுவதும் 16,000 மொஹல்லா மருத்துவமனைகளை நிறுவி அனைத்து பஞ்சாப் மக்களுக்கும் இலவச சிகிச்சை அளிப்போம். அனைவருக்கும் வாரம் 7 நாட்களும், 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்குவோம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம். 

இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Tags:    

Similar News