செய்திகள்
கைது

ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசிய வழக்கில் அமமுக பிரமுகர் கைது

Published On 2021-04-09 04:19 GMT   |   Update On 2021-04-09 04:19 GMT
ரவீந்திரநாத் எம்.பி. கார் மீது கல்வீசிய வழக்கில் அ.ம.மு.க. பிரமுகரான மாயி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:

சட்டசபை தேர்தல் நாளான கடந்த 6-ந்தேதி, தேனி எம்.பி. ரவீந்திரநாத் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியை பார்வையிட வந்தார். அப்போது திடீரென சிலர் அவரது கார் மீது கல்வீசினர். இதில் கார் கண்ணாடி உடைந்தது.

இதுகுறித்து எம்.பி.யின் கார் டிரைவர் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் எம்.பி. கார் மீது கல்வீசிய சம்பவம் தொடர்பாக பெருமாள் கவுண்டன்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க. பிரமுகரான மாயி (வயது 58) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில் மாயி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் பெருமாள் கவுண்டன்பட்டியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News