செய்திகள்
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி போட 200 பேரை அழைத்து வந்த பெண்ணுக்கு பரிசு

Published On 2021-09-14 10:30 GMT   |   Update On 2021-09-14 10:30 GMT
போளூரில் உள்ள 18 வார்டுகளில் 12 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு, முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசியாக 1,434 பேருக்கு செலுத்தப்பட்டது.
போளூர்:

போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போடும் மாபெரும் முகாம் நடந்தது. போளூரில் உள்ள 18 வார்டுகளில் 12 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டு, முதல் மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசியாக 1,434 பேருக்கு செலுத்தப்பட்டது.

இதில் போளூரை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர் மஞ்சுளா விவேகமாக செயல்பட்டு 200 பேரை முகாம்களுக்கு அழைத்து வந்து கொரோனா தடுப்பூசி போட வைத்து அனுப்பி வைத்தார். அவரின் சேவையை பாராட்டி பேரூராட்சி செயல் அலுவலர் முஹம்மது ரிஜ்வான் குக்கர் பரிசு வழங்கினார்.

அப்போது பேரூராட்சி தலைமை எழுத்தர் முகமது ஈசாக், போளூர் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஜி.சண்முகம் உடனிருந்து பாராட்டினார்கள்.
Tags:    

Similar News