ஆன்மிகம்
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2021-03-01 08:33 GMT   |   Update On 2021-03-01 08:33 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடப்பதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருகிற 4-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரை 10 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடக்கிறது.

அதையொட்டி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நேற்று பகல் 11.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணிவரை நடந்தது. கோவிலில் உள்ள மூலவர் சன்னதி, கொடிமரம், பலிபீடம், தரை தளம், தூண்கள், மாடங்கள், மண்டப மேற்கூரை மற்றும் துணைச் சன்னதிகள் ஆகியவை தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு, சுகந்த திரவியம் பூசப்பட்டது. அத்துடன் பூைஜக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் சுத்தம் செய்யப்பட்டன.

தூய்மைப் பணி முடிந்ததும் மூலவருக்கு சிறப்புப்பூைஜகள், நைவேத்தியம் நடந்தது. இதையடுத்து மாலை 3 மணியில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் துணை அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டு பூபதி, கோவில் ஆய்வாளர் ரெட்டிசேகர், கோவில் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News