செய்திகள்
பேரணியில் பங்கேற்ற விவசாயிகள்

பஞ்சாப் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி- சுக்பீர் சிங் பாதல் தலைமையில் திரண்ட விவசாயிகள்

Published On 2020-10-01 08:32 GMT   |   Update On 2020-10-01 09:30 GMT
பஞ்சாப் மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கவர்னர் மாளிகை நோக்கி சிரோமணி அகாலி தளம் சார்பில் விவசாயிகள் பேரணி புறப்பட்டது.
அமிர்தசரஸ்:

மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் மசோதாக்கள் சட்டமாகி உள்ள நிலையில், இந்த மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் பிரச்சினைக்காக பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிரோமணி அகாலி தளம் சார்பிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.

அவ்வகையில், அமிர்தசரசில் இருந்து சிரோமணி அகாலி தளம் சார்பில் விவசாயிகள் பேரணி இன்று தொடங்கியது. சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில் தொடங்கிய இந்த பேரணி, பஞ்சாப் கவர்னர் மாளிகை நோக்கி செல்கிறது. பேரணியில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய ஹர்சிம்ரத் கவுர், கட்சியின் முக்கிய நிர்வாகிள் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். பேரணி கவர்னர் மாளிகையை நிறைவடைகிறது. அதன்பின்னர் கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். 



இதுபற்றி சுக்பீர் சிங் பாதல் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். மீண்டும் பாராளுமன்ற இரு அவைகளையும் கூட்டி வேளாண் மசோதாக்களை திரும்ப பெறும்படி மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியிடம் கவர்னர் கோரிக்கை வைக்கும்படி அந்த மனுவில் தெரிவிக்க உள்ளோம். அந்த கருப்புச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர்.’ என்றார்.
Tags:    

Similar News