ஆன்மிகம்
சிவன்

சிவாலய யாத்திரை

Published On 2021-09-24 07:35 GMT   |   Update On 2021-09-24 07:35 GMT
பொருள் செலவு, நேரமின்மை, பயண அலைச்சல் போன்ற பலவிதமான காரணங்களால், பலராலும் இந்த புண்ணிய யாத்திரையை சரிவர கடைப்பிடிக்க முடியாமல் போகக்கூடும்.
சிவாலய யாத்திரை என்பது பெரும் புண்ணியத்தை சேர்க்கும் சக்தி கொண்டது என்பது ஆன்மிக பெரியோர்களின் அசைக்க முடியாத கருத்து. அதனால்தான் சிவனடியார்களாக வாழ்ந்த பெரும்பாலானவர்கள், சிவபெருமானைத் தேடி ஒவ்வொரு தலமாகச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சமயக்குரவர்கள் நால்வரான அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசனம் செய்து பேறுபெற்றனர்.

பொதுவாக 108 சிவாலயங்கள் வரை வழிபாடு செய்திருந்தால், அது பெரும் புண்ணியம் என்று கருதப்படுகிறது. பொருள் செலவு, நேரமின்மை, பயண அலைச்சல் போன்ற பலவிதமான காரணங்களால், பலராலும் இந்த புண்ணிய யாத்திரையை சரிவர கடைப்பிடிக்க முடியாமல் போகக்கூடும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான் காஞ்சிபுரம். புராதனச் சிறப்புமிக்க இந்த ஊர், ஏராளமான ஆலயங்களை உள்ளடக்கியதாகவும் விளங்குகிறது.

காஞ்சிபுரத்தில் சிறப்புமிக்க 108 சிவாலயங்கள் இருக்கின்றன. அந்த 108 சிவாலயங்களிலும் மொத்தம் 168 சிவலிங்கங்கள் மற்றும் பைரவர், சிவபெருமான் திருமேனிகள் உள்ளன. எனவே நீங்கள் வேறு எங்கள் அலைச்சல் கொள்ளாமல், காஞ்சிபுரம் தலத்தில் உள்ள 108 சிவாலயங்களை மட்டும் தரிசனம் செய்தாலே போதுமானது. சிவாலய யாத்திரையால் கிடைக்கும் புண்ணிய பலன்கள் அனைத்தும் வந்துசேரும்.
Tags:    

Similar News