தொழில்நுட்பம்
ரியல்மி - கோப்புப்படம்

ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-07-29 06:19 GMT   |   Update On 2019-07-29 06:19 GMT
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரியல்மி பிராண்டின் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரியல்மி பிராண்டு இந்தியாவில் ஒப்போவின் துணை பிராண்டாக மே 2018-இல் அறிவிக்கப்பட்டது. இந்திய சந்தையில் அறிமுகமானது முதல் ரியல்மி பிராண்டு தொடர் வெற்றி பெற்று வருகிறது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி தனக்கென குறிப்பிடத்தக்க பிராண்டு அந்தஸ்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ரியல்மி பிராண்டு மிட்-ரேன்ஜ் சந்தையில் கவனம் செலுத்தி வருகிறது. சமீபத்தில் ரியல்மி பிராண்டு ரியல்மி எக்ஸ் எனும் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து ரியல்மி பிராண்டு 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுமட்டுமின்றி ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவும் தயாராகிவிட்டது.


முன்னதாக ரியல்மி தனது 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என அறிவித்திருந்தது. இந்நிலையில், ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் 5ஜி ஸ்மார்ட்போன் உருவாக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கும் பட்சத்தில் 2020 ஆம் ஆண்டில் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் மூலம் ரியல்மி பிராண்டு பிரீமியம் சந்தையில் களமிறங்க இருக்கிறது.

புதிய அறிவிப்பின் மூலம் ரியல்மி பிராண்டு ஹூவாய், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் சாம்சங் நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. ரியல்மி தவிர மோட்டோரோலா, எல்.ஜி. மற்றும் சியோமி போன்ற பிராண்டுகளும் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
Tags:    

Similar News