தொழில்நுட்பம்
மோட்டோ டேப் ஜி20

மோட்டோ டேப் ஜி20 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-09-23 11:31 GMT   |   Update On 2021-09-23 11:31 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஜி20 டால்பி அட்மோஸ் வசதி கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா  நிறுவனம் தனது மோட்டோ ஜி20 டேப்லெட் மாடலை செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் 8 இன்ச் எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் ஹீலியோ பி22டி பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, ஸ்டாக் ஆண்ட்ராய்டு, மெட்டல் டிசைன், டால்பி அட்மோஸ் மற்றும் 5100 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.



இதன் அம்சங்கள் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லெனோவோ டேப் எம்8 மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News