செய்திகள்
கோப்புபடம்

மாணவர்கள் தொழில்முனைவோராக மாற ஆசைப்பட வேண்டும் - இ.டி.ஐ.ஐ., இயக்குனர் பேச்சு

Published On 2021-09-13 06:44 GMT   |   Update On 2021-09-13 06:44 GMT
புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான பணிகளை தொழில்முனைவோர் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர்;

திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி தொழில்முனைவோர் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் புதிய தொழில்முனைவோருக்கான ஆன்லைன் கருத்தரங்கம் நடந்தது. 

இதில் சென்னை தொழில்முனைவோர் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது:

புதிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான பணிகளை தொழில்முனைவோர் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

பாலிடெக்னிக், என்ஜினீயரிங், மருத்துவ கல்லூரி மாணவர்கள் மத்தியில் புதிய தொழில்முனைவோராவது குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தொழில் தொடங்கியோருக்கு ஏற்றுமதி, இறக்குமதி, ஜி.எஸ்.டி., இ வே பில், வர்த்தக விரிவாக்கம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாணவர்கள் எதிர்காலத்தில் வேலை வாய்ப்பையும் உள்நாட்டு உற்பத்தியையும் பெருக்கும் தொழில்முனைவோராக மாறுவதற்கு ஆசைப்பட வேண்டும். 

தொழில்முனைவோருக்கு கைகொடுக்கும் அரசு திட்டங்கள் ஏராளம் உள்ளன. சலுகைகள் குறித்து நன்கு தெரிந்து வளர்ச்சிக்கு அவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News