ஆன்மிகம்
அம்மா மண்டபம்

நாளை தை அமாவாசை: அம்மா மண்டபம் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு

Published On 2021-02-10 09:05 GMT   |   Update On 2021-02-10 09:05 GMT
தை அமாவாசையையொட்டி நாளை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஆடி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை நாட்களில் கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் பித்ரு தோஷம் நீங்க முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நாளை (வியாழக்கிழமை) தை அமாவாசையாகும்.

ஆடி அமாவாசையின் போது கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் திதி கொடுப்பதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் திதி கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள அமாவாசையின் போது திதி கொடுக்க இதுவரை அரசின் சார்பில் தடை எதுவும் அறிவிக்கப்படவில்லை. காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் தை அமாவாசையின் போது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தரப்பில் விசாரித்தபோது, அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு தடை எதுவும் இல்லை என்றனர். இதனைத் தொடர்ந்து தர்ப்பணம் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News