செய்திகள்
கோப்புபடம்

விபத்துக்களை தடுக்க வாகனங்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்

Published On 2021-09-15 04:48 GMT   |   Update On 2021-09-15 04:48 GMT
கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த சாலை விபத்தில் நான்கு வயது சிறுமி மினி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்:

கனரக வாகனங்களில் ஏர்ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர் வேலுமணி, பாலசுப்ரமணி, சிவக்குமார் (தெற்கு) ஆகிய அதிகாரிகள் குழு பழைய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.

இதில் காமராஜர் சாலை வழியாக வந்த 40 பஸ்களில் சோதனை நடத்தியதில் 6 மினி பஸ், 3 அரசு பஸ்கள், 6 தனியார் பஸ் என 15 பஸ்களில் ஏர்ஹாரன் பொருத்தியிருப்பது தெரிய வந்தது.

கடந்த சனிக்கிழமை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த சாலை விபத்தில் நான்கு வயது சிறுமி மினி பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏர்ஹாரன் சத்தமாக ஒலித்ததே விபத்துக்கு காரணமாக அமைந்தது. அதன் அடிப்படையில், அதிகாரிகள் குழு பஸ்களில் ஏர்ஹாரன்களை அகற்றி வருகின்றனர்.
Tags:    

Similar News