ஆன்மிகம்
வராக சாமி கோவிலில் விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் பார்வையிட்டனர்.

திருப்பதி வராக சாமி கோவிலில் 5 நாட்கள் மகா சம்ப்ரோசவ விழா நடக்கிறது

Published On 2021-11-24 07:47 GMT   |   Update On 2021-11-24 07:47 GMT
திருப்பதி வராக சாமி கோவிலில் ஜீர்ணோத்தரணம் மற்றும் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷம் நாளை முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
திருப்பதியில் ஏழுமலையான் கோவில் அருகில் தெப்பக்குளம் அருகே வராஹ சாமி கோவில் உள்ளது. இங்கு பாலாலய பணிகள் நடந்து கருவறை விமானத்தில் தங்க மூலாம் பூசும் பணி முடிந்துள்ளது.

இதையொட்டி கோவிலில் ஜீர்ணோத்தரணம் மற்றும் அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷம் நாளை முதல் 29-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கான அங்குரார்ப்பணம் இன்று தொடங்கியது.

நாளை வைதிக நிகழ்ச்சிகளும், 27-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 28-ந்தேதி மகா சாந்தி ஹோமமும், 29-ந்தேதி அஷ்டபந்தன மகா சம்ப்ரோசவம் மற்றும் பூர்ணாயுதி நடைபெறுகிறது.

அன்று இரவு உற்சவ மூர்த்திகளான விஸ்வகேஸ்வரர் மற்றும் ஏழுமலையான் ஆகியோர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிகளில் ஜீயர்கள், வேத பண்டிதர்கள் மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News