தொழில்நுட்பம்
அம்பரேன் ஸ்மார்ட் பிட்னெஸ் வாட்ச்

அம்பரேன் ஸ்மார்ட் பிட்னெஸ் வாட்ச்

Published On 2019-09-06 08:24 GMT   |   Update On 2019-09-06 08:24 GMT
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் அம்பரேன் நிறுவனம் பிட்னெஸ் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.
மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் அம்பரேன் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் பிட்னெஸ் வாட்ச். இதன் விலை ரூ.2,999. இருதய துடிப்பு மானிட்டர் இதில் உள்ளது. ஏ.எப்.பி 38 என்ற பெயரில் வந்துள்ள இந்த வாட்சின் டிஸ்பிளே வண்ணமயமாக உள்ளது. சூரிய ஒளியிலும் இதன் டிஸ்பிளே துல்லியமாக தெரியும். இருதய துடிப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கும். மணிக்கட்டை சுழற்றினாலே பிட்னெஸ் பற்றிய விவரங்களை இது அளிக்கும்.

இதில் லித்தியம் பாலிமர் பேட்டரி உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தாலே 7 நாட்கள் வரை செயல்படும். உங்களது செயல்பாடுகளை இது கவனிக்கும். குறிப்பாக உங்கள் உடலில் கலோரி சத்து எந்த அளவுக்கு எரிக்கப்பட்டது என்பதை கணக்கிட பெடோமீட்டர் உள்ளது. அதேபோல தூங்கும் அளவை கண்காணிக்க ஸ்லீப் மானிட்டரிங் உள்ளது. நீங்கள் நிர்ணயித்த இலக்கை எட்டுவது குறித்து அறிவுறுத்தும். தூசி மற்றும் நீர் புகா தன்மை கொண்டது.

நீச்சல் வீரர்களும் 1.5 மீட்டர் ஆழம் வரை இதை அணிந்தபடி நீந்திச் செல்லலாம். இது தவிர ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளுக்கு இதன் மூலம் பதில் அளிக்க முடியும். அதேபோல குறுஞ்செய்திகளை படித்து அதற்கு பதில் அளிக்க முடியும். அத்துடன் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றையும் இதில் பார்க்க முடியும். ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்பதால் அழகிய புகைப்படங்கள் எடுக்கவும் இது உதவும்.

அதேபோல கை தவறுதலாக உங்கள் ஸ்மார்ட்போனை எங்காவது வைத்துவிட்டால் அதைக் கண்டுபிடிக்கவும் இது உதவும்.
Tags:    

Similar News