செய்திகள்
சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்த காட்சி.

அரியலூரில் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சூப்பிரண்டு திறந்து வைத்தார்

Published On 2021-05-01 12:31 GMT   |   Update On 2021-05-01 12:31 GMT
அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களை கண்டறியும் வகையில், அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், 

இந்த போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஆன்லைன் பணமோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள், இணையவழி பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற ஆன்லைன் குற்றங்களை புகாராக அளிக்கலாம். மேலும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது சைபர் கிரைம் போலீசார் மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரிடம் இருந்து புகாரை பெற்றார். அந்த புகார் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 

இதில் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, சேகர், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், தனி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News