செய்திகள்
கோப்புபடம்

ஆயுதபூஜையை முன்னிட்டு திருப்பூர் வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில் இயக்கம்

Published On 2021-10-08 07:47 GMT   |   Update On 2021-10-08 07:47 GMT
திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி ரெயில் நிலையத்தில் இந்த ரெயில்கள் நின்று செல்லும்.
திருப்பூர்:

ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு திருப்பூர் வழியாக கோவை - சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது, என சேலம் கோட்ட ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க வருகிற 13-ந்தேதி மற்றும் நவம்பர் 3-ந்தேதியில் சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. 3 ‘ஏ.சி.,’, 8 படுக்கை வசதி, நான்கு முன்பதிவு உள்ளிட்ட 17 பெட்டிகள் கொண்டதாக இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

வருகிற 17-ந்தேதி மற்றும் நவம்பர் 7-ந்தேதி மறுமார்க்கமாக கோவையில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி ரெயில் நிலையத்தில் இந்த ரெயில்கள் நின்று செல்லும்.

சென்னையில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை, 7:30 மணிக்கு கோவை சென்று சேரும். கோவையில் இருந்து இரவு 11:30 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 7:20 மணிக்கு சென்னை சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News