செய்திகள்
கோப்புபடம்

முதுகுளத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2021-09-18 10:49 GMT   |   Update On 2021-09-18 10:49 GMT
முதுகுளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாய் மற்றும் கண்களில் கருப்பு துணியால் கட்டி யூனியன்அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

முதுகுளத்தூர்:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாய் மற்றும் கண்களில் கருப்பு துணியால் கட்டி யூனியன்அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் எஸ்.டி. செந்தில் குமார், ஒருங்கிணைப்பாளர் செல்வநாயகபுரம் பால்சாமி, குமாரகுறிச்சி செந்தில்குமார், கீழக்குளம் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தநாயகி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் குழந்தை தெரசிங்கராயர், பஞ்சாயத்து தலைவர்கள் காக்கூர் ஜெயமணி ராஜா, விளங்குளத்தூர் கனகவள்ளி முத்துவேல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பறிக்காதே பறிக்காதே ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்காதே. எஸ்.எப்.சி. வழங்கிடு. ஊராட்சி நிர்வாகத்தில் தலையிடாதே என்று கோ‌ஷமிட்டனர்.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) அன்புக்கண்ணனிடம் கோரிக்கை மனுவை கூட்டமைப்பு நிர்வாகிகள் கொடுத்தனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கு கலெக்டர் மற்றும் கூடுதல் ஆட்சியர் உறுதியளிக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என கூட்டமைப்பு தலைவர் ஆனந்தநாயகி முத்துராமலிங்கம் தெரிவித்தார்.

Tags:    

Similar News