ஆட்டோமொபைல்
ஹூண்டாய் கார்

இந்திய சந்தைக்கென புதிய மைக்ரோ எஸ்யுவி உருவாக்கும் ஹூண்டாய்

Published On 2020-11-17 10:43 GMT   |   Update On 2020-11-17 10:43 GMT
ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைக்கென புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஹூண்டாய் நிறுவனம் ஏஎக்ஸ்1 கான்செப்ட் எனும் குறியீட்டு பெயர் கொண்ட மைக்ரோ எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இது சான்ட்ரோ போன்றே கே1 பிளாட்பார்மில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. புதிய மைக்ரோ எஸ்யுவி சான்ட்ரோ மற்றும் வென்யூ மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படலாம் என தெரிகிறது.

ஸ்பை படங்களின் படி புதிய ஹூண்டாய் கார் டாப்-பாய் டிசைன், பம்ப்பரில் ஹெட்லேம்ப் மவுண்ட் செய்யப்பட்டு, சி வடிவ கிரில் வழங்கப்படுகிறது. காரின் உள்புறம் சி பில்லர் மவுண்ட் செய்யப்பட்ட டோர் ஹேண்டில்கள், 6 ஸ்போக் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.



இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே சான்ட்ரோ, ஆரா, கிராண்ட் ஐ10 நியோஸ், இரண்டாம் தலைமுறை கிராண்ட் ஐ10 போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் புதிய மினி எஸ்யுவி கொண்டு மைக்ரோ எஸ்யுவி பிரிவில் களமிறங்க ஹூண்டாய் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. 

இந்திய மைக்ரோ எஸ்யுவி பிரிவில் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ, மஹிந்திரா கேயுவி100, இக்னிஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா ஹான்பில் உள்ளிட்ட மாடல்கள் போட்டியை ஏற்படுத்த இருக்கின்றன. 

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய ஏஎக்ஸ் மாடல் வெளியாகும் பட்சத்தில் இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 4 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 6 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம். புதிய மாடல் அடுத்த ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்படலாம் என கூறப்படுகிறது. 
Tags:    

Similar News