செய்திகள்
கடல் போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணை.

மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

Published On 2019-12-15 13:42 GMT   |   Update On 2019-12-15 13:42 GMT
காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 35 நாட்களாக 120 அடியாக நீடித்து வருகிறது.

மேட்டூர்:

தமிழகத்தில் ஜீவாதாரமாக திகழும் மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

மேலும் இந்த மாவட்டங் களில் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூர் அணையை பொறுத்தவரை முழுக்க முழுக்க கர்நாடக அணை களை நம்பியே உள்ளது. அங்குள்ள முக்கிய அணை களான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும்போது அந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் போதிய மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்து போது மான அளவு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை மற்றும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் கர்நாடக அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் அதிக அளவு திறக்கப்பட்டது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணை 4 முறை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைத்தது. கடந்த மாதம் 11-ந்தேதி அணை மீண்டும் நிரம்பியது. இந்த நிலையில் தற்போதும் காவிரியில் நீர்வரத்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. நேற்று அணைக்கு 4900 கன அடி தண்ணீர் வந்தது.

இன்று காலை 4843 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கடந்த 35 நாட்களாக தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 4000 கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் எப்போதும் இல்லாத அளவுக்கு டிசம்பர் மாதம் 120 அடி தண்ணீர் இருந்து வருவதால் இந்த அணையை நம்பியுள்ள மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு வராது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் குறுவை சாகுபடிக்கும், ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பா சாகுபடிக்கும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தாளடி சாகுபடிக்கும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

பல ஆண்டுகளாக மழை பொய்த்ததால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வருணபகவான் கருணை காட்டியதால் மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.

மேலும் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News