உள்ளூர் செய்திகள்
பார்த்தகோட்டா பகுதியில் காலிபிளவர் சேதம் அடைந்து இருக்கும் காட்சி.

சூளகிரி பகுதியில் சூறைகாற்று வீசியதால் விளைநிலங்கள் சேதம்

Published On 2022-05-07 09:58 GMT   |   Update On 2022-05-07 09:58 GMT
சூறைகாற்று வீசியதால் விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிசுற்று வட்டாரங்களில் மாலை வேலைகளில் 6-வது நாளாக இடியுடன் ஆலங்கட்டி காற்று உடன் மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை 4 மணி அளவில் சூளகிரி அருகே இம்மிடிநாயக்கன்ப் பள்ளி ஊராட்சியை சேர்ந்த கரகூர் பகுதியில் ஆலங்கட்டி காற்றுடன் மழை பெய்தது. இதனால் முன்னாள் ஒசஅல்லிஊராட்சி மன்ற தலைவர் மாைதயனுக்கு சொந்தமான ரூ.38 லட்சத்தில் அமைக்கப்பட்டிருந்த பசுமை குடி நாசமானது.

 அதே போல அப்பகுதியில் தக்காளி மற்றும் விவசாய பயிர் நாசமானது. தியாகரசனப் பள்ளி பகுதியில் தக்காளி, கோஸ்' பூதினா தோட்டங்கள், பாத்த கோட்டா பகுதியில் தக்காளி, காலிபிளவர், முட்டை கோஸ், மற்றும் பயிர்கள் நாசமானது.
Tags:    

Similar News