ஆட்டோமொபைல்
ஹூண்டாய் வென்யூ கார்

ஹூண்டாய் வென்யூ 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கார் அறிமுகம்

Published On 2019-09-06 08:24 GMT   |   Update On 2019-09-06 08:24 GMT
ஹூண்டாய் நிறுவனம் 1.5 லிட்டர் திறன் கொண்ட டீசல் என்ஜின் காரை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய வரவுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடல் ‘வென்யூ’. காம்பாக்ட் எஸ்.யு.வி.யாக வந்துள்ள இந்த காரை வாங்க 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை இது உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது. ஏற்கனவே டீசல் மாடலில் 1.4 லிட்டர் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் என்ஜின் கொண்ட மாடல்கள் வந்துள்ளன.

தற்போது 1.5 லிட்டர் திறன் கொண்ட டீசல் என்ஜின் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இது பாரத் புகை விதி 6-ஐ பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 115 ஹெச்.பி. திறனும் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது.

இந்நிறுவனத்தின் மற்றொரு செடான் மாடலான எலென்ட்ராவின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்ட இது 152 ஹெச்.பி. திறனையும், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது.

இது பாரத் 6 புகைவிதி சோதனைக்குட்பட்டதாகும். இது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கிரில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்கு மற்றும் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு ஆகியன வாகனத்துக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. பின்பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட பம்பர், ரிவர்ஸ் விளக்கு, பாக் விளக்கு ஆகியன வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் உள்பகுதியில் 8 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.

பாதுகாப்பு அம்சத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியன இதில் முக்கியமான மாற்றங்களாகும். ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்டவையும் உள்ளன. இதன் விலை ரூ.13.82 லட்சம் முதல் ரூ.18.92 லட்சம் வரை இருக்கும். இதில் டீசல் மாடல் விலை ரூ.15.13 லட்சத்தில் தொடங்கி ரூ.20.05 லட்சத்தில் முடிகிறது.

Tags:    

Similar News