செய்திகள்
சஸ்பெண்டு

பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரி ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்டு

Published On 2021-09-30 09:08 GMT   |   Update On 2021-09-30 09:08 GMT
புதுவையில் பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்டு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி:

புதுவை கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனராக இருந்த பத்மநாபன், அத்துறையின் இயக்குனர் பொறுப்பையும் கவனித்து வந்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு, பத்மநாபன் மீது, அங்கு பணிபுரியும் பெண் டாக்டர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இது தொடர்பாக உள்ளூர் விசாரணை குழு, விசாரணை நடத்தியது. இந்த குழு முன்பு ஆஜராகி 27 பெண்கள் சாட்சியம் அளித்தனர்.

பத்மநாபன், பெண் டாக்டருடன் பேசியதாக கூறப்படும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது. பத்மநாபன், அரசு நிறுவனமான ’பாண்கேர்’ துறைக்கு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், நேற்று அவசர வழக்கை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். பாலியல் புகார் தெரிவித்திருந்த கால்நடை துறை முன்னாள் இயக்குனர் பத்மநாபன், தன் மீதான விசாரணையை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் 3 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 2 ஆண்டாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர் இன்று (வியாழக்கிழமை) ஓய்வு பெற உள்ளதால், அவசர வழக்காக எனது மனுவினை எடுத்து விசாரிக்க வேண்டும்’ என பெண் டாக்டர் குறிப்பிட்டிருந்தார். வழக்கு காணொலி வாயிலாக ஐகோர்ட்டு நீதிபதி சரவணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பாலியல் புகாருக்கு உள்ளான பத்மநாபனை சஸ்பெண்டு செய்ய தலைமை செயலர், துறை செயலருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, இன்று பணி ஓய்வு பெறும் நாளில், பத்மநாபன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வைகை, ஸ்டாலின் அபிமன்யூ ஆகியோர் ஆஜராகினர்.
Tags:    

Similar News