லைஃப்ஸ்டைல்
வங்கி கடனை திருப்பி செலுத்திய பின்னர் மறக்கக்கூடாதவை...

வங்கி கடனை திருப்பி செலுத்திய பின்னர் மறக்கக்கூடாதவை...

Published On 2021-08-26 06:23 GMT   |   Update On 2021-08-26 06:23 GMT
வீட்டு கடன் திருப்பி செலுத்திய பிறகு ஓரிரு மாதங்களில் சிபில் விவரங்கள் சரியாக அப்டேட் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கியிடம் தகவல் தெரிவிப்பது முக்கியம்.
வங்கி அல்லது இதர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற வீடு அல்லது வீட்டு மனைக் கடனை முற்றிலும் திருப்பி செலுத்தி விட்ட பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

* வீட்டின் மீதான பிணை உரிமை விலக்கப்பட்டதற்கான ஆவணத்தை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

* கடன் பெற்றவர் பெயர் மற்றும் வங்கி கடன் எண், தவணைகள் முறையாக செலுத்தப்பட்டு விட்டது ஆகிய தகவல்களை உள்ளடக்கிய தடையில்லா சான்றையும் (NOC) பெறவேண்டும்.

* வீட்டுக்கான ஒரிஜினல் பத்திரங்களை சம்பந்தப்பட்ட வங்கி திருப்பி தரும்போது அவை நல்ல நிலையிலும், பக்கங்கள் விடுபடாமலும் இருப்பதை கவனித்து கொள்ளவேண்டும்

* வீட்டு கடன் திருப்பி செலுத்திய பிறகு ஓரிரு மாதங்களில் சிபில் விவரங்கள் சரியாக அப்டேட் ஆகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கியிடம் தகவல் தெரிவிப்பது முக்கியம்.

* வங்கியிலிருந்து திரும்ப பெற்ற வீட்டு பத்திரங்களுக்கான வில்லங்க சான்றிதழில் வங்கியின் பிணை உரிமை நீக்கம் பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதை புதிதாக ஒரு வில்லங்க சான்று எடுத்து அறிந்து கொள்ள வேண்டும். மேற்படி தகவல்கள் இடம் பெறாவிட்டால் அதை பதிவாளரிடம் தெரிவிக்க வேண்டும்.

Tags:    

Similar News