உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்.

கிருஷ்ணகிரி கம்யூனிஸ்ட் கட்சியினர் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம்

Published On 2022-05-07 10:26 GMT   |   Update On 2022-05-07 10:26 GMT
கிருஷ்ணகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில்,தாசில்தாரிடம் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு வட்ட செயலாளர் ராஜா தலைமை தாங்கி பேசினார்.

 அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை மக்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வாழ்த்து வருகின்றனர். 
இதில் பெரும்பாலான ஏழை குடும்பங்கள் நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழ்த்து வருகின்றனர்.

 தற்போது நீதிமன்றங்களின் உத்தரவுகளை அமுல்படுத்த வேண்டும் என்று அரசு நிர்வாகங்கள் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. நீர்நிலைகளை பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றுக் கருத்து கிடையாது.  நில வகைப்பாட்டில் நீர் நிலை என்று வருவாய்த்துறை கணக்குகளில் இருக்கும். ஆனால் பெரும் பகுதி மக்கள் வீடுகள் நீர்நிலைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்கிறது.

எனவே அரசும், நீதித்துறையும், நீர்நிலைகளுக்கு பாதிப்பு உள்ளதா என்று ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் கட்டியுள்ள, பாதிப்பு இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதுவரை வீடுகளை இடிக்காமல் இருக்கவும், ஆய்வுக்குழு அமைக்க வேண்டுமென தமிழக அரசின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். 

கிருஷ்ணகிரி வட்டத்தில் நீண்ட காலமாக சாகுபடி செய்யும் நிலங்களுக்கும், குடியிருந்து வரும் வீடுகளுக்கும் பட்டா வழங்கிட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு என்றும், ஓடை புறம்போக்கு என்றும் நோட்டீஸ் கொடுத்துள்ளதை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பெரியசாமி, சக்தி, வட்டக்குழு உறுப்பினர் சின்ராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் மனுக்களை வழங்கினர்.
Tags:    

Similar News