ஆன்மிகம்
நாமக்கல் அரங்கநாதர்

நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

Published On 2020-12-21 08:46 GMT   |   Update On 2020-12-21 08:46 GMT
நாமக்கல் அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்கு புறத்தில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீலன் என்ற மன்னரால் கட்டப்பட்ட குடவறை கோவிலான அரங்கநாதர் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

வழக்கமாக இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1,500 பேர் வீதம் 18 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவில் படிவாசல் மற்றும் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

இந்த ஆண்டு அரங்கநாதரை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அவசியம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News