செய்திகள்
கோப்புப் படம்

ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - 1.25 லட்சம் ஆசிரியர்கள் சஸ்பெண்டு

Published On 2021-05-23 23:57 GMT   |   Update On 2021-05-23 23:57 GMT
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
நைபிடா:

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஆங் சாங் சூகி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை ராணுவம் கைது செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அவர் வீட்டுக்காவலில் உள்ளார்.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிக்கூட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அப்படி ஈடுபட்டவர்களில் 1,25,000 பேரை சஸ்பெண்டு செய்து ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

ராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என மியான்மர் ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர 19,500 பல்கலைக்கழகத்தின் பணியாளர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

மியான்மரில் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2 ஆண்டுகளில் 4.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
Tags:    

Similar News