செய்திகள்
கனிமொழி

‘அக்கா வீட்டுக்கு வருவீங்களா...’ பள்ளி மாணவியின் ஆசையை நிறைவேற்றிய கனிமொழி

Published On 2020-12-26 07:07 GMT   |   Update On 2020-12-26 07:07 GMT
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவியின் ஆசையை தி.மு.க. எம்.பி. கனிமொழி நிறைவேற்றியுள்ளார்.
சென்னை:

தி.மு.க. எம்.பி. கனிமொழி விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் நடந்த மக்கள் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் ராஜகீர்த்திகா என்ற 7-ம் வகுப்பு மாணவியும் இருந்துள்ளார். அவருக்கு கனிமொழியை மிகவும் பிடிக்குமாம். அவரை பார்ப்பதற்காகவே அந்த கூட்டத்துக்கு சென்றுள்ளார்.

கூட்டம் தொடங்கியதும் குறைகளை சொல்பவர்கள் சொல்லலாம் என்றுகூறி ஒவ்வொருவரும் பேச ‘மைக்’ வழங்கப்பட்டுள்ளது.

அப்போது மாணவி ராஜகீர்த்திகாவும் பேசுவதற்கு விருப்பம் தெரிவித்து கையை தூக்கி இருக்கிறார். உடனே அந்த சிறுமியிடம் மைக் கொடுக்கப்பட்டது.

மைக்கை வாங்கிய ராஜகீர்த்திகா “அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்க வீடடுக்கு நீங்க வருவீங்களா” என வெள்ளந்தியாக கேட்டார். அதை கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியை அருகில் அழைத்து கனிமொழி “கூட்டம் முடியட்டும் உங்க வீட்டுக்கு வந்துவிட்டு போகிறேன்” என உறுதி கொடுத்தார்.

கிராமசபைக்கூட்டம் முடிந்ததும் சிறுமி ராஜகீர்த்திகாவை அழைத்து கனிமொழி வாம்மா உங்க வீட்டுக்கு போகலாம் எனக் கூறியதும் அந்த சிறுமிக்கு ஏக சந்தோசம். ஆமத்தூர் கிராமமக்களும் நெகிழ்ந்து போனார்கள். பின்னர் சிறுமி வீட்டுக்கு சென்று கனிமொழி அவருக்கு ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை பரிசாக அளித்ததுடன் படிப்பு தான் முக்கியம். அதில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

சிறிது நேரம் அந்த வீட்டில் அமர்ந்து உரையாடிய கனிமொழி அவர்கள் கொடுத்த காபியையும் பருகிவிட்டு விடைபெற்று சென்றார்.
Tags:    

Similar News