செய்திகள்
சி 453 கப்பல்

கடலோர பாதுகாப்பு படைக்கு புதிய அதிவேக கப்பல்- நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது

Published On 2021-02-20 03:26 GMT   |   Update On 2021-02-20 03:26 GMT
இந்திய கடலோர பாதுகாப்பு படையின் சி-453 கப்பலை நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் லீனா நந்தன் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
சென்னை:

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 17-வது இடைமறிக்கும் கப்பலாக (இன்டெர்செப்டார் போட்) சி-453 நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சி-453 கப்பலை, நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குனர் லீனா நந்தன் நாட்டுக்காக அர்ப்பணித்தார். அப்போது பாதுகாப்பு துறை கூடுதல் செயலாளர் ஜிவேஷ் நந்தன், கடலோர பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரல் கிருஷ்ணசாமி நடராஜன், ஐ.ஜி. பரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்திய கடலோர பாதுகாப்பு படையின் சி-453 கப்பல் 45 கடல் மைல் வேகத்தில் செல்லக்கூடிய படகாகும். இந்த கப்பல் மூலம் கடலோரங்களை மிக அருகில் இருந்து கண்காணிக்க உதவும். இந்த கப்பலில் உள்ள நவீன தொழில்நுட்பம் மூலம் கடலில் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் படகு மற்றும் கப்பலை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கமுடியும். கடலோர பாதுகாப்பு படை துணை கமாண்டர் அனிமேஷ் சர்மா தலைமையில் இயங்கும் இந்த கப்பல் கடலோர பாதுகாப்பு படையின் கிழக்கு பிராந்திய பகுதியில் தனது பணியை தொடங்கும். இந்த புதிய கப்பலுடன், கடலோர பாதுகாப்பு படையில் 157 கப்பல்கள், 62 வானூர்திகள் தற்போது பணியில் உள்ளது. மேலும் 40 கப்பல்கள் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் 16 எம்.கே.-3 ரக ஹெலிகாப்டர்களும் பெங்களூருவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News