செய்திகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் சேர்க்கலாம் - மாநில தேர்தல் ஆணையம்

Published On 2019-10-05 03:22 GMT   |   Update On 2019-10-05 03:22 GMT
விடுபட்ட வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல் 2019 தொடர்புடைய சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்களில் உள்ள விவரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட வாக்காளர் பட்டியல்களின் வரைவு பட்டியல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குசாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத வாக்காளர்கள் தங்களது சட்டசபை தொகுதிக்கான வாக்காளர் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடர்புடைய இணையதளத்திலோ சென்று தங்கள் சார்ந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம். தேர்தல் ஆணைய இணையதளம் மூலம் பெயரை சேர்க்க விரும்புவோர் தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களை http://www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News