செய்திகள்
தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன்

நீட் பயிற்சி மையங்களை அரசு அதிகரிக்க வேண்டும் - தமிழக பா.ஜ.க. தலைவர் வலியுறுத்தல்

Published On 2020-10-17 12:13 GMT   |   Update On 2020-10-17 12:13 GMT
தமிழக அரசு நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து பயிற்சியை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பிரதமர் மோடியின் திட்டங்களை வெளிப்படுத்தும் கொலு பொம்மைகளை தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் திறந்து வைத்துள்ளார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு, நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து, பயிற்சியை மேம்படுத்த வேண்டும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வரும் ‘நீட்’ தேர்வில் இந்த ஆண்டு தமிழக அளவில் தேர்வு எழுதிய 99,610 பேரில் 57,215 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.  இதனால், கடந்த ஆண்டைவிட 2,570 பேர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News