தொழில்நுட்பம்
சாம்சங் லெவல் யு2

18 மணி நேர பேக்கப் வழங்கும் சாம்சங் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்

Published On 2021-02-05 07:22 GMT   |   Update On 2021-02-05 07:22 GMT
18 மணி நேர பேக்கப் வழங்கும் சாம்சங் லெவல் யு2 ப்ளூடூத் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.


சாம்சங் நிறுவனம் லெவல் யு2 ப்ளூடூத் ஸ்டீரியோ இயர்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த லெவல் யு மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். 

புதிய லெவல் யு2 அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நெக் பேண்ட் டிசைன் மற்றும் 41.5 கிராம் எடை கொண்டுள்ளது. இதனை இயக்க நான்கு பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும் இரண்டு பில்ட்-இன் மைக்ரோபோன், 12 எம்எம் டிரைவர்கள் வழங்கப்பட்டு உள்ளன.



சாம்சங் ஸ்கேலபிள் கோடெக் தொழில்நுட்பம் பயனர்கள் அருகாமையில் இருக்கும் இடையூறுகளை கண்டறிந்து, ஆடியோ பிட்ரேட்டை தானாக அட்ஜஸ்ட் செய்யும். இதனால் சீரான ஆடியோ அனுபவம் கிடைக்கிறது. இதில் ப்ளூடூத் 5.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 159 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இது அதிகபட்சம் 18 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இந்தியாவில் புதிய சாம்சங் லெவல் யு2 ப்ளூடூத் இயர்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News