தொழில்நுட்பம்
நோக்கியா ஸ்மார்ட்போன்

நோக்கியாவின் அல்ட்ரா பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

Published On 2021-07-06 11:48 GMT   |   Update On 2021-07-06 11:48 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் உருவாக்கி வரும் புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் 2019 வாக்கில் நோக்கியா 9 பியூர்வியூ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. அதன்பின் இந்த மாடலுக்கான மேம்பட்ட வேரியண்ட் இதுவரை அறிமுகம் செய்யப்படவே இல்லை. எனினும், நோக்கியா 9 சீரிஸ் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் நோக்கியா 9.3 ஸ்மார்ட்போனினை வெளியிட ஹெச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இது ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 



சீனாவுக்கான ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவன மேலாளர் ஷாங் யுஷெங், புதிதாக 5ஜி பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 11 ஆம் தேதி சீன சந்தையில் வெளியாகும் என தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகளில் பிளாக் பிரைடே விற்பனை போன்று சீனாவில் நவம்பர் 11 ஆம் தேதி சிங்கில்ஸ் டே விற்பனை நடைபெற்று வருகிறது.

புது பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. முன்னதாக வெளியான தகவல்களில் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விரைவில் நோக்கியா X50 மற்றும் நோக்கியா X70 ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. 
Tags:    

Similar News