செய்திகள்
காங்கிரஸ்

உள்ளாட்சி தேர்தல்- காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பெயர் பட்டியல் தயாரிப்பு

Published On 2021-08-17 04:57 GMT   |   Update On 2021-08-17 06:39 GMT
பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலில் காட்டும் ஆர்வம், ஈடுபாட்டை உள்ளாட்சி தேர்தலில் காட்டுவதில்லை என்பதை கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டினர்.
சென்னை:

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

இதையொட்டி தேர்தல் நடைபெறும் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்.



தேர்தலை சந்திப்பது, அந்த மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் சட்டமன்ற தேர்தலில் காட்டும் ஆர்வம், ஈடுபாட்டை உள்ளாட்சி தேர்தலில் காட்டுவதில்லை என்பதை கட்சி நிர்வாகிகள் சுட்டிக்காட்டினார்கள்.

பஞ்சாயத்து அளவில் கட்சி வளர்ந்தால்தான் கட்சி பலப்படும். எந்த தேர்தலையும் எளிதாக சந்திக்க முடியும். உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை பெண்களுக்கு ஒதுக்கீடு இருக்கிறது. வேட்பாளர்கள் தேர்தலில் கட்சிக்காரர்களின் உறவினர்களுக்கு மட்டுமே வழங்குவதை தவிர்க்க வேண்டும். கட்சிக்காக உழைப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

பின்னர் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களிடம், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பவர்களின் பெயர் பட்டியலை தயாரியுங்கள். ஒரு வாரத்தில் அந்த பட்டியலை கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போது காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதே நேரம் காங்கிரசுக்கு தேவையான இடங்களை தி.மு.க.விடம் கேட்டு பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் 9 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News