ஆன்மிகம்
தான்தோன்றீஸ்வரர்

அசூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் குடமுழுக்கு நாளை நடக்கிறது

Published On 2021-09-08 07:33 GMT   |   Update On 2021-09-08 07:33 GMT
கும்பகோணம் அசூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தற்போது திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் குடமுழுக்கு நடக்கிறது. .
கும்பகோணம் அருகே உள்ள அசூர் கிராமத்தில் அன்னபூரணி அம்பாள் தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.

மிகவும் பழமையான இந்த கோவில் கடந்த பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இந்தக் கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. இதில் புதிதாக ராஜகோபுரம் எழுப்பப்பட்டு கோவில் புனரமைக்கப்பட்டது. தற்போது திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு கோவில் குடமுழுக்கு நடக்கிறது. .

கடந்த 6-ந் தேதி கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம், லக்ஷ்மி ஹோமம் உள்ளிட்ட யாகங்களுடன் விழா தொடங்கப்பட்டது. நேற்று வாஸ்து சாந்தி கும்ப அலங்காரம் உள்ளிட்ட சடங்குகளுடன் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. இன்று(புதன்கிழமை) யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாகுதி தீபாராதனை நடக்கிறது. நாளை காலை மங்கள இசையுடன் யாகசாலை பூஜைகள் நடைபெற்று பூர்ணாஹுதி நடைபெறுகிறது. தொடர்ந்து 7.45 மணிக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்று 8 மணிக்கு ஆலய விமான குடமுழுக்கும், 8.15 மணிக்கு மூலஸ்தான விமான குடமுழுக்கும் நடக்கிறது.

தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை ஒ.வி. கிருஷ்ணசாமி குடும்பத்தினர், அசூர் கிராமமக்கள், உபயதாரர்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News