ஆட்டோமொபைல்

சென்னையில் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் எஸ்.யு.வி.

Published On 2019-06-06 11:15 GMT   |   Update On 2019-06-06 11:06 GMT
ஆடம்பர சொகுசு கார் நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் சென்னையில் தனது கலினன் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது.



சொகுசு கார்களைத் தயாரிக்கும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் முதல் முறையாக எஸ்.யு.வி. மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது. கடந்த வாரம் சென்னையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.6.95 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



கோடீஸ்வரர்களுக்கான இந்த காரை சென்னையில் அறிமுகம் செய்து உரிய வாடிக்கையாளர்களைக் கவர இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. செவ்வக வடிவிலான ஹெட்லைட், மிகப் பிரமாண்டமான 22 அங்குல அலாய் சக்கரங்கள், மேற்கூரை ஸ்பாயிலர், நேர் செங்குத்தாக அமைந்துள்ள பின்புற விளக்குகள், இரட்டை எக்ஸாஸ்ட் பைப் ஆகியன இந்தக் காரின் கம்பீரத்தை மேலும் பறைசாற்றும்.

கலினன் காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ வி 12 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 563 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 850 என்.எம். டார்க் செயல்திறனை வெளிப்படுத்தக் கூடியது. இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் உள்ளது. புதிய எஸ்.யு.வி. கார் சாலைப் பயணத்துக்கு மட்டுமின்றி சாகசப் பயணத்துக்கும் ஏற்றது.
Tags:    

Similar News