ஸ்லோகங்கள்
ஐயப்பன்

ஐயப்பன் விளக்கு பூஜை போற்றி

Published On 2021-12-06 04:39 GMT   |   Update On 2021-12-06 08:49 GMT
இந்த போற்றியை அர்ச்சித்த பின்னர் சாம்பிராணி, ஊதுபத்தி, காண்பித்து, நிவேதனம் செய்து கற்பூரத்தை ஏற்றிக்கொண்டு, ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் சரணம் என்று காட்டவும்.
1. அச்சங்கோவில் அரசே போற்றி
2. ஆரியங்காவு அய்யாவே போற்றி
3. அகில நாயகனே போற்றி
4. ஆறுமுகன் சோதரனே போற்றி
5. அன்பர்க்கு மெய்யன்பனே போற்றி
6. ஆனைமுகன் தம்பியே போற்றி
7. இருமுடிப் பிரியனே போற்றி
8. ஈசன் மகனே போற்றி
9. இடரை தீர்ப்பவனே போற்றி
10. ஈடில்லா தெய்வமே போற்றி
11. இளநீர் பிரியனே போற்றி
12. வன்புலி வாகனனே போற்றி
13. உண்மையின் தத்துவமே போற்றி
14. உலகைக் காப்பவனே போற்றி
15. உலக நாயகனே போற்றி
16. ஊழ்வினை களைபவனே போற்றி
17. ஐயந் தவிர்ப்பவனே போற்றி
18. ஐயப்ப தெய்வமே போற்றி
19. ஓங்கார ரூபனே போற்றி
20. ஒற்றுமையில் ஒளிர்பவனே போற்றி
21. கற்பூரப் பிரியனே போற்றி
22. காந்தமலை வாசனே போற்றி
23. கற்பூர ஜோதியே போற்றி
24. சபரி பீடமே போற்றி
25. தர்ம சாஸ்தாவே போற்றி
26. கால சாஸ்தாவே போற்றி
27. தீப ஜோதியே போற்றி போற்றி

என்று அர்ச்சித்த பின்னர் சாம்பிராணி, ஊதுபத்தி, காண்பித்து, பானகம், நீர்மோர், கடலை சுண்டல், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரத்தை ஏற்றிக்கொண்டு, ஹரிஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் சரணம் - என்று காட்டவும்.

பிறகு மூன்று முறை நமஸ்கரித்து மேற்கண்ட நாமாக்களை சரணம் சொல்லி வணங்கவும். பூஜை முடிந்தவுடன் சிறிது பாலை தீபத்திற்கு வைக்கவும்.

அனுதினமும் இவ்விதம் செய்ய மகர ஜோதியை இறைவனின் கருணையால் நன்கு தரிசித்து சகல சௌபாக்யங்களையும் பெறலாம். ஏழரை ஆண்டு சனி கிரகம் கொடுக்கும் தொல்லைகளிலிருந்தும் விடுபடலாம்.'

Tags:    

Similar News