செய்திகள்
உச்சநீதிமன்றம்

ஆடைக்கு மேற்பகுதியுடன் உடலை தொட்டது குற்றமாகாது என்ற மும்பை உயர்நீதிமன்ற கருத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

Published On 2021-01-27 08:53 GMT   |   Update On 2021-01-27 08:53 GMT
போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபரின் வழக்கில், skin to skin contact அல்லாத தொடுதல் குற்றமாகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியிருந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமை குற்றச்செயலில் ஈடுபடும் கொடூரர்கள் மீது போக்சோ (POCSO) சட்டம் பாயும். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது.

சிறுமிக்கு பாலியல தொந்தரவு கொடுத்ததாக ஒரு நபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறுமியின் மார்பகத்தை, அவர் ஆடை அணிந்திருந்து, ஆடையின் மேற்பகுதியின் மூலம் (without ''skin to skin contact'') தொட்டால் பாலியல் வன்கொடுமையாக எடுத்துக் கொள்ள முடியாது எனக் கூறிய மும்பை உயர்நீதிமன்றம், போக்சோ சட்டம் பாய்ந்த நபரை விடுதலை செய்தது. இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.எ. பாப்தே தலைமையிலான பெஞ்ச், உயர்நீதிமன்றம் குற்றவாளியை விடுதலை செய்யலாம் என்ற உத்தரவுக்கு தடைவிதித்து. அத்துடன் இந்த வழக்கில் குற்றம்சாட்ட நபர் இன்னும் இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tags:    

Similar News